கிறிஸ்தவத் தொல்லியல் என்பது திருஅவை & மனிதகுலத்தின் மீதான சேவை
தொல்லியல் என்பது ஓர் அறிவியல் துறை மட்டுமல்ல, வரலாறு, இடங்கள் மற்றும் பொருள் கலாச்சாரத்தில் நம்பிக்கை எவ்வாறு வாழ்ந்துள்ளது, வெளிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பொதிந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும்” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ
கிறிஸ்தவத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொல்பொருளியலின் முக்கியத்துவம் குறித்து டிசம்பர் 10, புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள திருத்தூதுமடல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
1925 ஆம் ஆண்டில், முதல் உலகப் போரின் கொடூரமான காயங்களைத் தணிக்கும் நோக்கத்துடன் “அமைதியின் யூபிலி விழா” (Jubilee of Peace) அறிவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இந்நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, “எதிர்நோக்கின் யூபிலி விழா” (Jubilee of Hope) என்ற மற்றொரு விழாவுடன் ஒத்துப்போகிறது, இது தற்போது ஏராளமான போர்களால் பாதிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு நம்பிக்கையின் புதிய பார்வையை வழங்க முயல்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.