நம் விசுவாச வாழ்வு என்பது மனமாற்றத்தின் பயணம்
விசுவாசிகள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும், நம் வாழ்வை மாற்றியமைக்க கடவுள் விடுக்கும் அழைப்புக்கு செவிமடுக்க இந்த தவக்காலம் தரும் வாய்ப்பை நாம் ஏற்கவும் தயாராக இருப்போம் என தன் தவக்காலச் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் மாதம் 5ஆம் தேதி துவங்க உள்ள தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற யூபிலி ஆண்டின் மையக்கருத்தை ஒட்டி தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
பயணத்தின் முக்கியத்துவம், ஒன்றிணைந்து பயணித்தல், எதிர்நோக்குடன் பயணித்தல் என்ற மூன்று கோணங்களில் தன் கருத்துக்களை இத்தவக்காலச் செய்தியில் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை.
நம் விசுவாச வாழ்வு என்பது மனமாற்றத்தின் பயணம் எனக்கூறும் திருத்தந்தை, இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கி பயணம் செய்ததுபோல் நம் வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://euvitafarm.com/
Comments are closed.