செப்டம்பர் 4 : நற்செய்தி வாசகம்

நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.

“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.

எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————

“அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்”

பொதுக் காலத்தின் இருபத்து இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I 1 கொரிந்தியர் 2: 10b-16

II லூக்கா 4: 31-37

“அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்”

நீண்ட மறையுரை:

அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் ‘நீண்ட’ மறையுரை வழங்குவதற்குப் பெயர் போனவர்.

ஒருநாள் அவர் வழக்கம்போல் ‘நீண்ட’ மறையுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து வெளியே போனார். ‘நான் மறையுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது எப்படி இவரால் வெளியே போக முடிகின்றது?’ என்று அருள்பணியாளருக்கு ஆத்திரமாக வந்தது. இருந்தாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

மறையுரை நேரத்தில் வெளியே போன மனிதர் திருப்பலி முடியும் நேரத்தில் கோயிலுக்குள் வந்தார். அவரை மடக்கிப் பிடித்த அருள்பணியாளர் அவரிடம், “எதற்காக நீங்கள் நான் மறையுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது, எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்பார். “முடிவெட்டுவதற்காக!” என்றார் அவர். “மறையுரை நேரத்தில்தான் எழுந்து முடிவெட்டப் போக வேண்டுமா? கோயிலுக்கு வருவதற்கு முன்பாக முடியை வெட்டுக்கொண்டு வரலாம் அல்லவா” என்று அருள் பணியாளர் அவரிடம் தனது குரலை உயர்த்திக் கேட்டார்.

“ஒரே நேரத்தில் இரண்டை வெட்டிக்கொண்டிருக்க முடியாது அல்லவா” என்று பேசத் தொடங்கிய அந்த மனிதர், “என்னால் உங்களுடைய மறையுரையைக் கத்திரி போட்டு வெட்ட முடியாது; ஆனால், என்னுடைய தலைமுடியைக் கத்திரி போட்டு வெட்டமுடியும். அதனால்தான் நான் உங்களுடைய மறையுரையின்போது முடிவெட்டச் சென்றேன்” என்றார். இதைக் கேட்டு அருள்பணியாளர் அப்படியே ஆடிப் போய்விட்டார்.

மக்களுக்குக் கற்பிக்கின்றபோது ஏனோதானோ என்று அல்ல, அதிகாரத்தோடு கற்பிக்கவேண்டும் என்பதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு அதிகாரத்தோடு கற்பித்தார் என்று வாசிக்கின்றோம். எப்படி அவரால் அதிகாரத்தோடு கற்பிக்க முடிந்தது என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தன்னுடைய சொந்த ஊர் மக்கள் தன்னைப் புறக்கணித்ததை நினைத்து மனம் தளராத இயேசு, கப்பர்நாகுமிற்கு வந்து அங்குள்ள மக்களுக்குக் கற்பிக்கின்றார். இயேசுவின் போதனையைக் கேட்டு அங்கிருந்த மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள்.

Comments are closed.