மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

கடந்த மே மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

பிறந்த இந்த ஜூன் மாதம் முழுவதும் நம்முடைய தேவன் நம்மை ஆசீர்வாதங்களால் நிரப்பிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

நாடு முழுவதும் வீசுகின்ற வெப்ப அலைகள் தணிந்து மக்களை வாட்டுகின்ற இந்த கொடிய வெப்பம் குறைய நல்ல மழையை நமக்கு இறைவன் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

மறைசாட்சியும், இன்றைய புனிதருமான புனித ஜஸ்டினிடமிருந்து விசுவாசத்தையும், மறைக் கோட்பாடுகளைப் பற்றி புரிந்து கொள்ளும் தெளிவான ஞானத்தையும் நாம் பெற இப்புனிதர் வழியாக இறைவனிடம் மன்றாடுவோம்.

செபமாலையின் ஐந்தாவது 10 மணியை இதற்காக ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.