குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் திருத்தந்தை

திருத்தந்தையின் விருப்பத்திற்கு இணங்க அகில உலக திருஅவையில் உலக குழந்தைகள் தினம் மே மாதம் 25, மற்றும் 26 தேதிகளில், அதாவது இந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சிறப்பிக்கப்படுகிறது.

உலக குழந்தைகள் தினத்தின் முக்கிய கொண்டாட்ட நிகழ்வுகள் உரோம் நகரில் இடம்பெறும் எனினும் இத்தினத்தை ஒவ்வொரு மறைமாவட்டமும் சிறப்பிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

கத்தோலிக்க திருஅவையில் முதன்முறையாக குழந்தைகளுக்கென ஒரு தினம் சிறப்பிக்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழா மூவேளை செப உரையின்போது திருத்தந்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடுச் செய்துள்ளது.

உலகின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து, அதாவது ஏறக்குறைய 101 நாடுகளில் இருந்து உரோம் நகர் வந்துள்ள குழந்தைகளை இச்சனிக்கிழமை மாலை அந்நகரின் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் சந்தித்து அவர்களோடு உரையாடி, சேர்ந்து செபிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 26 ஞாயிற்றுக்கிழமையன்று குழந்தைகளோடு, குழந்தைகளுக்காக திருப்பலி நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்

Comments are closed.