திருத்தந்தைக்குக் குவிந்த வாழ்த்துச் செய்திகள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

ஏப்ரல் 23,  இச்செவ்வாயன்று, உலகலாவியத் திருஅவை மறைசாட்சியாளர் புனித ஜார்ஜ் விழாவைக் கொண்டாடிய வேளை, Jorge [George] Mario Bergoglio என்ற இயற்பெயரைத் தாங்கியுள்ள நமது திருத்தந்தைக்கு, உலகம் முழுவதிலும் இருந்து தங்களது ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்கும் வண்ணம் ஏராளமான வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர்.

இத்தாலிய அரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி

இத்தாலிய அரசுத் தலைவர் Sergio Mattarella அவர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இத்தாலிய மக்களின் அன்புநிறைந்த வாழ்த்துக்களுடன் இணைந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும், நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சகோதரத்துவத்தின் தவிர்க்க முடியாத பிணைப்புகளைப் பாதுகாப்பதற்கான அவரின் வேண்டுகோள்கள் சரியான நேரத்தில் விடுக்கப்படுவதாகவும், அவைகள் அழுத்தம் கொண்டவைகளாக உள்ளன என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் பாராட்டியுள்ளார் Mattarella.

உங்களின் வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள இலட்சக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களின் மனசாட்சியை சவால் செய்வதை நிறுத்தாத முறையீடுகள் என்றும், அவைகள் விசுவாசிகளுக்கும் நம்பிக்கையற்றவர்களுக்கும் நீதி மற்றும் அமைதியின் வளமான விதைகளை உருவாக்குகின்றன என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் Mattarella.

வத்திக்கான் தலைமைச் செயலகத்தின் பொது ஒழுங்குமுறைகளின் பிரிவு 50-இல், இந்த விடுமுறையை ஏப்ரல் 2016-இல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறுவியதன் வழியாக, தற்போது பணியிலிருக்கும் திருத்தந்தையின் பெயர்கொண்ட நாள் (ஏப்ரல் 23) வழக்கமாக வத்திக்கானில் ஒரு பொது விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். 

Comments are closed.