நம் காயங்களைக் குணமாக்கிய இயேசுவின் அன்பு

இயேசுவின் மீது நாம் கொண்ட அன்பு நம்மைக் கவனித்துக் கொண்டது என்றும், அவரது இரக்கம் நமது காயங்களைக் குணமாக்கியது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 17 தவக்காலத்தின் முதல் சனிக்கிழமை இயேசுவின் அன்பை முன்னிலைப்படுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கொடைகளால் நாம் நிரப்பப்பட்டுள்ளோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

நம்மைப் பாதுகாத்து பராமரிக்கும் இயேசுவின் அன்பு, நம் காயங்களைக் குணப்படுத்திய அவரது இரக்கம், நம் இதயங்களை மகிழ்ச்சிக்குத் திறந்த தூயஆவி போன்றவை இறைவன் நமக்களித்த கொடைகள் என்றும், இவைகள் நமக்காக மட்டும் என்று வைத்திருக்கவோ, மறைத்துவைத்துக் கொள்ளவோ முடியாதவைகள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் இத்தகைய கொடைகளால் நிரப்பட்ட நாம் அந்த கொடைகளை பிறருக்கு வழங்கவும், நமக்கே நாம் கொடைகளாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.