இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்31.12.2023
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது.” என திருத்தூதர் யோவான் கூறுகிறார்.
உலக விஷயங்களில் நாம் அதிகம் நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் அல்லும், பகலும் நோன்பிருந்து மன்றாடி அருட்பணி செய்த இறைவாக்கினர் அன்னாவை பற்றி வாசித்தோம்.
84 ஆண்டுகள் பொறுமையோடும், விசுவாசத்தோடும் இருந்து நம் மீட்பரைக் கண்ட அன்னாவிடமிருந்து நாம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
பிறக்க இருக்கின்ற புதிய வருடம் நமக்கு எல்லா விதத்திலும் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இவ்வருடத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நாம் நமது பாவங்களுக்கு மனம் வருந்தி இறைவனின் இரக்கப் பெருக்கத்தை நாடி நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனத்தை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து
இந்த ஆண்டு முழுவதும் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி நமக்கு ஆசீர்வாதங்களை பெற்றுத் தந்த நம் அன்னை மரியாவுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.