இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 29.12.2023

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

புனித மாசில்லாக் குழந்தைகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில், நாம் குழந்தைகளைப் போல கள்ளம் கபடற்ற மாசில்லா தூய மனதினைக் கொண்டிருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

சாத்தானின் தீச்செயல்களில் ஒன்றான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளில் இருந்து அனைத்து குழந்தைகளையும் நம் இறைவன் காப்பாற்றிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

தூய ஆவியானவர் நம் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

தீராத நோயினால் அவதியுரும் அனைத்துக் குழந்தைகளையும் இறைவன் தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

இறைவனின் திருவெளிப்பாடு விழா தினத்தன்று பிறந்ததால் ‘காஸ்பர் மெல்கியோ பல்தஸார்’ என்ற இயற் பெயர் கொண்ட இன்றைய புனிதர் புனித காஸ்பர் தனது மறையுரையால் பெருவாரியான மக்களை இறைவன்பால் ஈர்த்தார். புனித காஸ்பரை திருச்சபைக்குத் தந்தருளிய இறைவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.