இயேசுவின் பிறப்பை கொண்டாட நம்மைத் தயார்படுத்துவோம்!
நமது இறைவேண்டல், ஒறுத்தல் மற்றும் பிறரன்பு செயல்கள் வழியாக நம்மிடம் வரும் இறைவனைச் சந்திக்க திருவருகைக் காலம் நமமை அழைக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 21, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தைக்கு விடாமுயற்சியுடன் செவிமடுத்து, அவருடைய அருளுக்குத் தாராளமாகப் பதிலளித்து இயேசுவின் பிறப்பைக் கொண்டாட நம்மைத் தயார்படுத்துவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments are closed.