அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்

ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?

அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்

ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில்

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்” என்றார்.

ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.

அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————

“கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்”

பொதுக்காலம் முப்பதாவது வாரம் திங்கட்கிழமை

I உரோமையர் 8: 12-17

II லூக்கா 13: 10-17

“கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்”

எப்போது நான் மீட்படைவேன்?

இருப்பூர்தியில், தன்னருகே அமர்ந்திருப்பது ஓர் அருள்பணியாளர்தான் என்பதை உறுதிசெய்துகொண்ட அந்த இளைஞன் அவரிடம், “சுவாமி! நான் பிற சமயத்தைச் சார்ந்தவன்தான். என்றாலும், கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் படித்தவன் என்பதால், எனக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி நன்றாகத் தெரியும். என்னுடைய பலநாள் கேள்வி இது. வழி தவறி அலையும் நான் மீட்புப் பெறுவதற்கு என்ன செய்வது?” என்றான்.

தன்னிடம் இவ்வளவு ஆர்வமாய்க் கேள்வி கேட்ட அந்த இளைஞனை அருள்பணியாளர் அன்பொழுகப் பார்த்துவிட்டு அவனிடம், எசாயா 53:6 இல் வருகின்ற முதற்பகுதியை மேற்கோள்காட்டிவிடு “ஆடுகளைப் போன்று அலைந்து திரியும் நீ, எப்பொழுது எல்லாருக்காகவும் இறந்த நல்லாயனாம் இயேசுவின் வழியில் நடக்கின்றாயோ, அப்பொழுது நீ மீட்படைவாய்” என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.

ஆம், ஊனியல்பின்படி வாழாமல், கடவுளின் வழியில் நடந்தால் மீட்படைவோம் என்பது உறுதி. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் ஊனியல்புகேற்ப வாழ்ந்தால், கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு, அவருடைய வழியில் நடக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கடந்த ஒருசில நாள்களாக நாம் வாசிக்கக்கேட்கும் (உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும்) முதல் வாசகத்தில் பவுல், ஊனியல்புகேற்ப வாழ்வது பற்றியும், தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்வது பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் அவர், ஊனியல்புக்கேற்ப வாழ்கின்றவர் சாகத்தான் வேண்டும், அதே நேரத்தில் கடவுளின் ஆவியால் இயக்கப்படுகின்றவர் கடவுளின் மக்களாகின்றார் என்கிறார்.

நற்செய்தி வாசகம், அலகையின் பிடிக்கு உள்ளாகும் ஒருவர் என்னாவார் என்பதைப் பதிவுசெய்கின்றது. தீய ஆவியின் பிடிக்கு உள்ளாகும் நற்செய்தியில் வருகின்ற பெண்மணி பதினெட்டு ஆண்டுகளாகக் கூன் விழுந்த நிலையிலேயே இருக்கின்றார். அப்படிப்பட்டவர்மீது பரிவுகொண்ட தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு, அந்தப் பெண்மணியிடமிருந்து தீய ஆவியை விரட்டியடித்து, அவரைக் கடவுளின் மகளாக மாற்றுகின்றார்.

ஆதலால், நாம் ஒவ்வொருவரும் தீய ஆவியால் அல்ல, தூய ஆவியாரால் இயக்கப்பட்டுக் கடவுளின் அன்பு மக்களாக மாறவேண்டும்.

இறைவாக்கு:

Comments are closed.