இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 29.10.2023
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
தூய ஆவி வழியாக இறைவனின் உறைவிடமாக, ஆலயமாக நாம் கட்டப்பட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு முன் இரவு முழுவதும் இறைத்தந்தையிடம் வேண்டினார் என்பதை காண்கிறோம். நாம் நமது வாழ்வில் தினந்தோரும் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் முன்னர் இறைவனிடம் வேண்டுவோம். ஒவ்வொரு விடயத்திலும் இறைத்திட்டத்தை நாம் அறிய முற்பட தூய ஆவியின் துணையை நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
தீவிரவாதி என அழைக்கப்பட்ட திருத்தூதர் சீமோன் ரம்பத்தால் அறுக்கப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். நாம் திருத்தூதர் சீமோனின் விழாவினைக் கொண்டாடும் இன்று, இயேசுவுக்காக துன்பங்களை ஏற்ற அவரது உயரிய பண்பினை நாமும் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கைவிடப்பட்டோர், அனாதைகள் போன்றோருக்குப் பாதுகாவலராக விளங்கும் திருத்தூதர் யூதா ததேயுவின் விழாவையும் இன்று கொண்டாடும் நாம், தனிமையில் வாடும் எண்ணற்ற மக்களுக்கு வாழ்வில் ஒளியும், நம்பிக்கையும் கிடைக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நாளை ஞாயிற்றுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.