இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

08.10.2023 (ஞாயிறு)

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி இரண்டாம் வாசகத்தில், “எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.” என்று புனித பவுலடியார் கூறுகிறார்.

பவுல் கூறியது போல கவலையை அகற்றி இறைவனிடம் நம் விண்ணப்பங்களை வைக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ….அவற்றைக் கடைப்பிடியுங்கள். அப்பொழுது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்” என்கின்றார்.

கடவுளிடமிருந்து பல்வேறு ஆசிகளைப் பெற்றுக்கொண்ட நாம், கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து நல்ல திராட்சைக் கனிகளாக பலன் கொடுக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்

“கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.” என்று இயேசு கூறுகிறார்.

இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் ஆண்டவரின் குழந்தைகளே. யாரையும் எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் சமூகத்தில் ஒதுக்கி வைத்தல் கூடாது. நம் வாழ்க்கையில் சிலரை சில தருணங்களில் ஒதுக்கி வைத்ததற்கு மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் நன்கு கிடைக்கப் பெறவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.