இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைத் தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.” என நமதாண்டவர் இயேசு சீடர்களிடம் கூறுகிறார்.
நமது இறைப்பணியானது தன்னலமற்ற வகையில் செயல் வடிவம் ஆகும்போது மட்டுமே முழுமை அடைகிறது என்பதை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
சிறு வயதிலிருந்தே ஏழைகளின்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தவரும், இன்றைய புனிதருமான புனித தெரெசா ஜோர்னெட், கைவிடப்பட்ட முதியோர்களின் பாதுகாவலராவார்.
கைவிடப்பட்ட முதியோர்களை இறைவன் கண்ணின் மணி போலக் காத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கர்நாடகாவில் குறிப்பாக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் அதிகமான தென் மேற்கு பருவ மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நாளை ஞாயிறுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.