இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றைய முதல் வாசகம், “கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!’ என்ற சொற்றொடரோடு முடிகின்றது. நற்செய்தி வாசகமோ, கடவுளுக்கு அஞ்சி வாழாத ஏரோது மன்னனைக் குறித்துக் கூறுகின்றது.

நாம் என்றும் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்று தூய பனிமய அன்னையின் விழாவினை நாம் கொண்டாடுகின்றோம்.நான்காம் நூற்றாண்டில் உரோமையில் வசித்த யோவானின் அன்னையிடம் கொண்ட பக்தி அவருக்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தது.

வாழ்வில் நமக்கும் ஆசீர்வாதங்கள் கிடைத்திட அன்னையின் பரிந்துரையை நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து

இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்பார்க்கும் பருவமழை நன்கு பெய்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பிடவும் வளர்ந்துவரும் வெறுப்பின் விஷ செடிகள் அகற்றப்பட்டு அன்பின் விதைகள் விதைக்கப்பட வேண்டியும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.