கொரிய மக்கள் அமைதியை ஊக்குவிப்பவர்களாகச் செயல்பட அழைப்பு

கொரிய தீபகற்பத்தில் ஆயுத மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என 1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஒரு முன்வரைவு கையெழுத்திடப்பட்டதன் 70ஆம் ஆண்டையொட்டி கொரியாவிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரிய மக்கள் எப்போதும் அமைதியை ஊக்குவிப்பவர்களாகச் செயல்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

இண்றைய மனித குடும்பத்தை, அதிலும் குறிப்பாக பலவீனமான மற்றும் ஏழை மக்களை

பெருமளவில் பாதித்துவரும் எண்ணற்ற போர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் மத்தியில், நீதியை பாதுகாக்கவும் நட்புணர்வுடன்கூடிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டிய தேவையை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் தென்கொரிய கர்தினால் Lazarus You Heung-sik அவர்களால் சியோல் நகரில் வாசித்தளிக்கப்பட்ட திருத்தந்தையின் இந்த செய்தி, ஒருவர் ஒருவருக்கான மதிப்பு, பொதுநலனையும் சட்டத்தையும் மதித்தல், கடந்த தலைமுறைகளால் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒழுக்கக் கொடைகளை மதித்து கடைப்பிடித்தல் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு, கொரிய மக்கள் அனைவரும் அமைதியின் இறைவாக்கினர்களாக செயல்படவேண்டும் என விண்ணப்பிக்கிறது.

அமைதி, நீதி மற்றும் மகிழ்ச்சியை உள்ளடக்கிய இறையரசை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணத்தை புதுப்பிக்க கொரிய மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் எனவும் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.