இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் புனித பவுல், “நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; ” என கூறுகிறார்.
சமூகத்தில் உள்ள வறியவர்கள், வலுக்குறைந்தவர்கள், ஏழைகள் மட்டில் நம்முடைய நிலைப்பாடு என்ன? என்று நாம் சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 19:14
“என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.” என கூறுகிறது.
நாம் நமது எண்ணங்களின், விருப்பங்களின்படி நடக்கின்றோமா? அல்லது ஆண்டவரின் எண்ணங்களின் விருப்பங்களின்படி நடக்கின்றோமா? என்று நாம் சிந்திக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.” என வாசிக்கின்றோம்.
இயேசு தன்னை அழைத்ததும், அவர் பின்சென்ற மத்தேயுவைப் போன்று, நம்மால் இயேசுவின் பின் செல்ல முடிகின்றதா? என நாம் ஆழ்ந்து சிந்திக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து
தனது 40-வது வயதில் மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான நமது தமிழ் மண்ணைச் சேர்ந்த புனித தேவசகாயத்திடமிருந்து கிறித்துவத்தின் மீது கொண்ட ஆழ்ந்த உறுதியை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்ந வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.