யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

யாழ். குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலைய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத் தியானத்தில் அமல மரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்திரு ஜெகன் கூஞ்சே அவர்கள் தியான உரையினையும், செபமாலைத்தாசர் சபையினைச் சேர்ந்த அருட்திரு ஜெபன் அவர்கள் நற்கருணை ஆராதனையினையும் நெறிப்படுத்தினார்கள். நான்கு மறைக்கோட்டங்களின் பங்குகளில் இருந்து 350 மறையாசிரியர்கள் இத்தியானத்தில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.