இக்காலத் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுங்கள்

என்றழைக்கப்படும் புனித யோசேப்பு துறவு சபை தோற்றுவிக்கப்பட்டதன் 150வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு, அச்சபையின் தலைவர் அருள்பணி துல்லியோ லொகாத்தெல்லி அவர்களுக்கு நல்வாழ்த்து மடல் ஒன்றை, மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித யோசேப்பு துறவு சபை, 1873ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, இத்தாலியின் தூரின் நகரில் புனித லெயோநார்ட் முரியால்தோ (Leonard Murialdo) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் புனித யோசேப்பு துறவு சபைக்கு ஆண்டவர் பொழிந்துள்ள ஆசிர்வாதங்களை நினைவுகூர்ந்து, அச்சபையின் தனிவரமாகிய இளையோருக்குக் கல்வி வழங்குவதில் என்றென்றும் புதிய வழிகளைக் காண சக்தியை அருளுமாறு ஆண்டவரிடம் மன்றாடுமாறும் திருத்தந்தை அச்சபையினரைக் கேட்டுக்கொண்டார்.

புதிய காலத்தில் புதிய பணிகள்

புனித லெயோநார்ட் முரியால்தோ

காலத்தின் அடையாளங்கள் முன்வைக்கும் சவால்களைப் புரிந்துகொண்டு அவற்றிற்கேற்ப வாழ்வதற்கு, புனித லெயோநார்ட் முரியால்தோ அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறும், புதிய வழிகளைக் காண, படைப்பாற்றல் திறனைப் பயன்படுத்துமாறும் திருத்தந்தை, பரிந்துரைத்தார்.

புனித முரியால்தோ வாழ்ந்த காலத்தில், அவர் தூரின் நகரில் பிறரன்புச் செயல்கள் வழியாக ஏழை மற்றும், கைவிடப்பட்ட இளையோருக்கு உதவினார், பின்னர், கல்வி மற்றும், தொழிற்கல்வி வழியாக அவர்களுக்கு மாண்புடைய ஒரு வருங்காலத்தை அமைத்துக்கொடுத்தார் என்றுரைத்த திருத்தந்தை, இப்புனிதர் கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைத்து இவற்றை ஆற்றினார் என்று கூறினார்.

புனித யோசேப்பின் ஆன்மீகத்தால் தூண்டப்பட்டு பணியாற்றிய இப்புனிதர், நாம் கடவுளின் கரங்களில் இருக்கிறோம், நாம் நல்ல கரங்களில் இருக்கிறோம் என்று அடிக்கடி சொல்வார் என்றுரைத்த திருத்தந்தை, இச்சபையினர் இக்காலத்தில் உலகெங்கும் நவீன முறையில் இளையோருக்கு உதவிவருவதையும், குடும்பங்கள் மற்றும், மறைக்கல்வி வகுப்புக்களை நடத்தி வருவதையும் பாராட்டிப் பேசினார்.

இளையோருக்கு எக்காலத்தையும்விட இக்காலத்தில் நம்பகமான சான்றுகள் தேவைப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, புனித யோசேப்பின் தாழ்மையான பண்பால் வழிநடத்தப்பட அனுமதித்து, காலத்தின் அறிகுறிகளை அறிந்து அதற்கேற்ப பணியாற்ற வேண்டும் என, புனித யோசேப்பு சபையினரைக் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.