முன்னாள் இலங்கை ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் இலங்கை ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த நிலையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தார்.
பிற்பகல் 2.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலை பற்றி இவர் ஆயருடன் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் அமைச்சர்‌ நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்‌களான தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் சுரேன் ராகவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்

Comments are closed.