லூர்து நகர்ப் புனித கன்னிமரியா லூர்தன்னை விழா

Gottesdienst an der Mariengrotte in Lourdes während der Internationalen Soldatenwallfahrt am 19. Mai 2017.
திருத்தந்தையின் நம்பிக்கைப் பிரகடனம்:
1854 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் எட்டாம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ‘மரியா அமல உற்பவி’ என்ற நம்பிக்கைப் பிரகடனத்தை அறிவித்தார்.
புனித கன்னி மரியாவின் காட்சிகள்:
இது நடந்து நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1858 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் பதினொன்றாம் நாள் பெர்னதத் என்ற 14 வயதுச் சிறுமிக்கு பிரான்சிலுள்ள லூர்து நகருக்கு அருகில் இருக்கும் மசபேல் என்ற குகையில் புனித கன்னி மரியா காட்சி கொடுத்தார். அந்த ஆண்டு மட்டும் 18 முறை புனித கன்னி மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார்.
ஒளி வெள்ளத்தில், வெள்ளை நிற உடையில், இடையில் ஊதா நிறக் கச்சையுடனும், கையில் செபமாலையுடன் பெர்னதத்திற்குத் தோன்றிய மரியா, முதலில் தன்னை யாரென்று அவருக்கு வெளிப்படுத்தவில்லை. மார்ச் திங்கள் 25 ஆம் நாள், 16வது முறை பெர்னதத்திற்குக் காட்சியளித்த போதே மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தன்னை வெளிப்படுத்தினார்.
மரியா பெர்னதத்திடம் தனது 13-வது காட்சியில், லூர்து நகரில் ஒரு கோயிலைக் கட்டி எழுப்புமாறு சொன்னார். பெர்னதத் இதை மறைமாவட்ட ஆயரிடம் சொல்ல, பின்னாளில் அங்கு ஒரு கோயில் கட்டி எழுப்பப்பட்டது.
மரியா லூர்து நகரில் பெர்னதத்திற்குக் காட்சியளித்தது 1862 ஆம் ஆண்டு திருஅவையில் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவானது 1907ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது.
புனித கன்னி மரியா பெர்னதத்திடம் சொன்னவை:
லூர்து நகரில் பெர்னதத்திற்குத் தோன்றிய புனித கன்னி மரியா அவரிடம் மூன்று முக்கியமான செய்திகளை சொன்னார்.
1. பாவிகள் மனமாற்றத்திற்காக இறைவனிடம் மன்றாட வேண்டும்.
2. ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்ல வேண்டும்.
3. இவ்வுலகில் நான் உனக்கு மகிழ்ச்சியைத் தருவேன் என்று சொல்லமாட்டேன்; ஆனால் மறு உலகில்‌ உனக்கு நிச்சயம் மகிழ்ச்சி உண்டு.
சிந்தனை:
“எனக்கு விருப்பமான இறைவேண்டல்களில் ஒன்று செபமாலை சொல்வது”
– திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்.
“செபமாலை என்பது ஒரு வல்லமையான கருவி. அதை நாம் தொடர்ந்து சொல்கிறபொழுது அளப்பரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்”
– புனித ரோஸ்மரியா எஸ்கிரிவா.
“கடவுளின் தாயான புனித கன்னி மரியா நமக்கும் தாய்

Comments are closed.