யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான கிறிஸ்து பிறப்புவழா ஒன்றுகூடல்

யாழ் மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்து பிறப்புவழா ஒன்றுகூடல் நிகழ்வுகள் இவ்வருடம் மறைக்கோட்ட ரீதியில் நடைபெற்றுள்ளன. யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான இந்நிகழ்வு 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்களோடு இணைந்து யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் 29ம் திகதி கடந்த புதன்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மண்டபத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமையில் முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்கள் துறவியருக்கான இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட குருக்கள் துறவிகளுக்கான ஒன்றுகூடல் 27ம் திகதி கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி ஆரோபண சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜேசுதாஸ் அவர்கள் தலைமையில்; இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட ஒய்வு நிலை ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கலந்து சிறப்பித்தார்.

Comments are closed.