திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் செய்தி

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்திகளை அவர்களோடுப் பகிர்ந்துகொண்டார்.

அன்பின் அடையாளமாகப் பிறந்த இயேசு, உங்கள் இதயங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் பிறக்கட்டும், ஏனெனில், “எங்கே சேவையும் அன்பும் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார்” என்று ஒரு புகழ்பெற்ற புனிதப் பாடல் கூறுகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கேதான் கடவுள் பிறக்கிறார், அங்குதான் அன்பு உறுதியாகிறது, அது நெருக்கமாகிறது, அது மென்மையாகிறது, அது இரக்கமாகிறது. இங்குதான் கடவுள் இருக்கிறார், என மேலும் உரைத்தார்.

கிறிஸ்துமஸ் உங்களுக்கு அமைதியைத் தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்,  குறிப்பாக கோவிட்-19 என்னும் பெருந்தொற்று குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, தனிமைப்படுத்தப்பட்ட காலக்கட்டம் மற்றும் தொலைதூரக் கற்றல் ஆகியவற்றால், குறிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும், இளையோர் பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

வேலை இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது என்பதில் திருப்பீடம் உறுதியாக இருக்கிறது, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பொது நலன்களை எப்போதும் மதித்து, ஒருவரையொருவர் சந்திக்க முயற்சிப்பதன் மூலமும், பேச்சுவார்த்தை மூலமும் திருப்திகரமான தீர்வுகளைக் காண முடியும் என்று, நான் நம்புகிறேன் என்றும் நபிக்கைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித யோசேப்பு மற்றும், புனித மரியாவின் வாழ்வு நமக்கு கற்பிப்பதுபோல் குடும்பம் என்பது கடவுளின் பாதுகாப்பை அனுபவிக்கும் ஓர் அருமையான இடம் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, குடும்பங்களை வழிநடத்தும் தாய் தந்தையருக்குப் பொறுமை தேவை, எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் மட்டுமே எப்போதும் நமக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதை விரும்புவார் என்பதில் அவர்களுக்கு அதிக நம்பிக்கை தேவை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

Comments are closed.