இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மை தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
வார இறுதி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயங்களில் மீண்டும் திருப்பலி நிறைவேற்றிட அரசு அனுமதிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், நீட் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
மறைசாட்சியாக மரித்தவரும், ‘கடினமான நூற்றாண்டின் பாதுகாவலர்’ என திருத்தந்தையால் அழைக்கப்பட்டவரும், இந்திய சிறைப்பணியின் பாதுகாவலருமான இன்றைய புனிதர் மேக்சிமிலியன் கோல்பேயிடமிருந்து தியாகத்தையும், பிறரன்பு சிநேகத்தையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றின் தீவிரத்தால் மரணித்த அனைவருக்காகவும் பிராத்திப்போம். அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.