இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இந்த ஜுன் மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகத்தில், “அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார். நீ எழுந்து பையனைத் தூக்கி விடு.” என வான தூதர் கூறியதை வாசிக்கின்றோம்.
“ஆண்டவர் கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார் (சீ.ஞா 35: 14)” என்கிறது சீராக்கின் ஞான நூல்.
கைவிடப்பட்ட நிலையில் இருப்போர் அனைவரும் ஆண்டவர் தமது வேண்டுதல்களுக்கு செவி சாய்ப்பார் என தளரா நம்பிக்கைக் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நாள் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் நாம் ஞானத்தோடு செயல்பட தூய ஆவியானவரின் துணையை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க இறைவனின் இரக்கத்தினை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை நன்கு குறைந்து வருகிறது. நமது வேண்டுதல்களை செவிமடுத்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.