இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 19.05.2021 இன்று, விஷேசமாக போரில் உள்ள அனைவருக்காகவும், உலக அமைதிக்காகவும் பிராத்திப்போம். முக்கியமாக காசா பகுதியில் துன்பத்திலிருக்கும் அனைத்து பாலஸ்தீனர்களுக்காவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இந்தியாவில் குஜராத்தில் கடந்த டவ்-தே புயலின் கோரத்தாண்டவத்தினால் பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களுக்காகவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
மருத்துவ சேவைப் பணியின் நிமித்தம் நோய்த்தொற்றுக்குள்ளான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய அனைவரும் பரிபூரண சுகம் பெற்றிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று பரவுதல் கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.