இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 18.05.2021 இன்று, விஷேசமாக அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக பிராத்திப்போம். அவர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அனைவரும் பரிபூரண சுகம் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
பொது மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவினை ஒழுங்காகக் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து நோய்பரவலை முற்றிலுமாகக் குறைத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் எண்ணற்ற கொரோனா தொற்று நோயாளர்களை இறைவன் தனது திருக்கரத்தால் தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
கொரோனா தொற்று இந்தியாவில் முற்றிலுமாக கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.