அருட்திரு ஜேம்ஸ் அவர்கள் கத்தோலிக்க சமய ஆலோசனை சபையின் அங்கத்தவராக நியமனம்

சிறந்த விழுமியங்கள் கொண்ட நேர் மனப்பாங்கு விருத்தியடைந்த பிள்ளைகளை பாடசாலை முறைமையிலிருந்து சமூகத்திற்கு வழங்குவது கல்வி அமைச்சின் மேலான எதிர்பார்ப்பாகும். இந்நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக அனைத்து சமயங்களுக்குமுரிய சமயக்கல்வி நடவடிக்கைளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த நிபுணத்துவம் வாய்ந்த சமய ஆலோசனை குழு ஒன்று தேசியரீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்வி அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள கத்தோலிக்க சமய ஆலோசனை சபையில் அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். இவ் அங்கத்துவம் 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் இங்க குறிப்பிடத்தக்கது.

Comments are closed.