இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை.” என புனித யோவான் கூறுகிறார்.
எந்தவித எதிர்ப்பார்ப்பின்றி நாம் பிறரிடம் தூய உள்ளத்தோடு அன்பு செலுத்த இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
“நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்’ (1 யோவா 3: 18) என்பார் திருத்தூதர் புனித யோவான்.
நாம் வெறும் பேச்சில் மட்டுமில்லாது நமது செயலிலும் உண்மையான அன்பை வெளிப்படுத்த இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என இயேசு தம் சீடர்களைப் பார்த்து கூறுகிறார்.
பசியோடு இருப்பவருக்கு உணவிடுவது நமது கடமை என்பதை உணர்ந்து அதை நமது அன்றாட வாழ்வில் அதை அடிக்கடி நிறைவேற்றிட
இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
‘மனித வாழ்க்கை என்பது பிறருக்கானது.’ என்பதை வாழ்ந்து காட்டிய அமெரிக்காவின் முதல் புனிதரும், இன்றைய புனிதருமான நியுமென்னை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
உலக நாடுகளில் புதிய வகை கொரோனாவினால் மறுபடியும் அச்சமும், பீதியும் நிலவுகிறது. புதிய வகை நோய்த் தொற்று பரவாமல் இருக்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.