இறைப்பணியாளர்களின் வரலாற்றுப்பதிவுகளை உள்ளடக்கிய ‘PIONEERS AND PREDECESSORS’ என்ற நூல் இன்று வெளியீடு
யாழ்., மன்னார் மறைமாவட்டங்களில் பணியாற்றி இறையடி சேர்ந்த 60 மறைப்பணியாளர்களின் வாழ்கை வரலாற்று பதிவுகள் வெவ்வேறு அருட்பணியாள்களால் எழுதப்பட்டு அருட்திரு ஞா. பிலேந்திரன் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்களும், சிறப்பு விருந்தினராக மன்னார் மறைவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குருக்கள் மன்றத் தலைவர் அருட்திரு அ.பெ. பெனற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்., மன்னார் மறைமாவட்ட குருக்களும் மறைந்த குருக்களின் பெற்றோர் சகோதரர்களென பலரும் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.