வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா

வங்காலை புனித ஆனாள் அன்னை ஆலயத் திருவிழாத் திருப்பலி 26.07.2020 அதாவது நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் வங்காலை மண்ணிலிருந்து உதயமாகிய அருட்தந்தையர்கள், இருபால் துறவிகள் ஆகியோருடன் இணைந்து ஒப்புக்கொடுத்தார்.
மேலும் ஆயர் தனது மறையுரையில் பங்குச் சமூகம் எவ்வாறு பங்குப்பணியில் பல்வேறு நிலைகளில் பங்குத்தந்தையுடன் இணைந்து செயற்பட முடியும் என்பதை அன்மையில் வத்திக்கான் திருப்பீடத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுமடலில் இருந்து கோடிட்டுக் காட்டினார்.
அன்றைய நாளில் கொரோனா கொவிட் 19 தொற்றுக் காரணமாக இறைமக்களின் நன்மை கருதி காலை 5.00 மணிக்கு (பொது), காலை 8.15 மணிக்கு (கத்தோலிக்க இளையோர்), காலை 9.30 மணிக்கு (மாணவர்), மாலை 5.00 மணிக்கு (பொது) ஆகிய நேரங்களில் விசேட திருப்பலிகளும் ஒப்புக் கொடுக்கப்பட்டன. மாலை 6.00 மணிக்கு அனைத்து திருப்பலிகளும் நிறைவடைந்த பின்பு திருச்சுரூபப் பவனியும், ஆசீர்வாதமும் வழ்ங்கப்பட்டது.
பங்குத்தந்தைக்கும் பங்கு மக்களுக்கும் திருவிழா நல் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்து மகிழ்கின்றோம்

Comments are closed.