மத தலங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்

📍 மத வழிபாட்டு தலங்கள், மற்றும் முக்கிய இடங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குபற்ற பொதுமக்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படாது.
📍 யாழ். நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாத யாத்திரைகளை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
📍 பாரம்பரிய மற்றும் சமய கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து முக்கிய புண்ணியஸ்தலங்களிலும் வழிபாட்டிடங்களிலும் இம்முறை திருவிழாக்களை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தியவடன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக்க நிலமேக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
📍 கண்டி தலதா மாளிகை மற்றும் கதிர்காமம்,தெவிநுவர உள்ளிட்ட தேவாலயங்களை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் பெரஹரக்கள் கொரோனா ஒழிப்பிற்கு உதவும் வகையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும்
📍 இம்முறை அனைத்து திருவிழாக்கள் மற்றும் பெரஹரக்களையும் குறைந்தளவிலான கலைஞர்களின் பங்குபற்றுதலுடனேயே
எந்தவொரு வழிபாட்டுத்தலங்களிலும் இடம்பெறும் திருவிழாக்கள் மற்றும் பெரஹெரக்களில் பங்குபற்றவோ பார்வையிடவோ பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.​
📍 தலதா பெரஹர 10 நாட்களும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
COVID ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.

Comments are closed.