இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வேகமாக பரவிவரும் இந்த நோய்த் தொற்று மக்களிடையே மிகவும் கவலையை அளிக்கிறது. நிலைமை முற்றிலும் கட்டுக்குள் வர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், தானியங்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும், அதை விற்க வழியில்லாமலும் அவதியுரும் அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் நல்லதொரு தீர்வினை இறைவன் தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சியை அறிவித்ததைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் கடந்த 43 நாள்களாக மதுக் கடைகள் மூடப்பட்டதால் அந்த பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட நினைத்திருந்த சிலர் வரும் நாள்களிலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியுடன் நிலைத்து நிற்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
“கொரோனா நோயின் நிமித்தம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து கணிசமான எண்ணிக்கையில் உலகம் முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதற்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
பெருகிவரும் நோய்த் தொற்று மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. பயத்தை உண்டாக்கும் தீய ஆவி நம் மனதை விட்டு முற்றிலும் அகல இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.