வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு வழிபாடும், திருப்பலியும்
மன்னார் மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்தில் இடம் பெற்ற சிறப்பு வழிபாடும், சிறப்பு திருப்பலியும்.
தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தின் பரிபாலகர் அருட்பணி அலெக்சாண்டர் (பெனோ) சில்வா அடிகளாரின் நெறிப்படுத்தலினாலும் மன்னார் மறைமாவட்ட வழிபாட்டு ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரின் ஒழுங்கமைப்பின் பிரகாரமும் மன்னார் மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை 26.04.2020 மாலை 4:00 மணிக்கு விசேட நற்கருணை வழிபாடும் அதனை தொடர்ந்து விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
முதலில் நற்கருணை வழிபாட்டினை அருட்பணி பெனோ அடிகளாரும், அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளாரும் இனைந்து வழிபாடுகளை நடாத்தியதுடன் இறுதி நற்கருணை ஆசீர்வாதத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் அனைத்து இறைமக்களுக்கும் வழங்கினார்.
தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டுகையின் தலைமையில் ஆயரின் செயலாளர் அருட்பணி நீக்கிலாஸ் அடிகளாரும், அருட்பணி கிறிஸ்ரியான் வாஸ் அடிகளாரும் இனைந்து ஒப்புக்கொடுத்தார்கள்.
விசேட விடமாக உலகை உலுப்பிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்றும் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய சீக்கிரம் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்றும், இத் தொற்றினால் இறந்த ஆன்மாக்கள் நித்தியவான் வீட்டில் இன்புற்றிருக்க வேண்டுமென்றும், நோயாளர்களோடு பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் உடல் நல சுக பலத்துடன் பணியாற்ற வேண்டுமெனவும் , விசேட விதமாக வேதசாட்சிகள் மண்ணில் உயிர்நீத்த மறைசாட்சிகள் வெகு விரைவில் புனிதர் நிலைக்கு உயர்த்தபட வேண்டும் என்ற சுகிர்த கருத்துக்களை முன்வைத்து இன்றைய நாள் வழிபாடுகளும், திருப்பலியும் இடம்பெற்றிருந்தன.
விசேட விதமாக திருப்பலியில் தமிழ் சிங்கள மொழிகளில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மறையுரையாற்றியிருந்தார்.
திருப்பலியின் நிறைவில் வேதசாட்சிகள் இராக்கினியின் திருச்சுருப சிறப்பு ஆசீர் உலகவாழ் அனைத்து மக்களுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கத்தோலிக்க செய்திக்காக திரு.கொண்சால் வாஸ் கூஞ்ஞ
Comments are closed.