நரகத்திலிருந்து வந்த எச்சரிக்கை!

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே கத்தோலிக்க கிறித்தவர்களிடையே நரகம் இருப்பது விசுவாச மறுதலிப்பாக உள்ளது அதனால் தான் இன்றைய உலகில் பாவம் நிறைந்து காணப்படுகிறது இதோ நரகத்தில் இருந்து ஒரு சாட்சி நரகத்தின் எச்சரிக்கை பற்றி , (கேட்க செவியுடையோர் கேட்கட்டும்)
நரகத்தில் இருந்து அன்னாள், கிளாராவிடம் தொடர்ந்து சொல்கிறாள்
“கடவுள் என்னைத் தம் பக்கம் இழுக்க எப்படி எல்லாம் முயற்சி செய்தார்! அவர் என்னைப் பின்தொடர்ந்து வந்தார். ஒரு தடவை நீ என்னை அழைத்துச் சென்ற ஆஸ்பத்திரி கோவிலில் என் வாழ்க்கையை நினைத்துப் பயந்து அழுதுவிட்டேன். அப்பொழுதே நான் திருந்தியிருக்கலாம். ஆனால் வேலை செய்யுமிடத்தில் மதம் என்பதெல்லாம் உணர்ச்சிவசமாவதுதான் என்று சொல்லக்கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. இந்த அழுகை அப்படித்தான் என்று அந்த வரப்பிரசாதத்தை தூர ஒதுக்கிவிட்டேன். நான் சரியாக நற்கருணைக்கு முழந்தாளிடவில்லை என்று நீ கடிந்து கொண்டாயே.
உண்மை என்னவென்றால் நற்கருணையில் நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். என் உடன் அலுவலர் பேசுவதையே கேட்டு நான் ஒரு தனி மதத்தையே எனக்காக உண்டாக்கி கொண்டேன் இறந்த பிறகு ஆன்மா தீர்வை கிடையாது; அது மறுபிறப்படையும் என்று நானும் நம்பி ஆன்ம இரட்சண்யத்தை அலட்சியப்படுத்தினதால். அந்நேரம் எனக்கு ஒரு கடின வியாதி வந்திருந்தால் ஒருவேளை நான் திருந்தியிருப்பேன்.
“அப்போதுதான் நான் ஒரு வாலிபனோடு தொடர்பு கொள்ளத் தொடங்கினேன். நீ மாதா சேத்திரத்திற்கு ஒரு திருயாத்திரை செல்ல அழைத்தாய். நான் அவனுடன் உல்லாசப் பயணம் சென்றேன். மறுபடி என்னைக் கண்டதும் “நீ பூசை கண்டாயா?” என்று கேட்டாய். பைத்தியக்காரி! என்று நான் கூறினேன்: கடவுள் உங்கள் சுவாமிமாரைப் போல் குறுகிய புத்தியுடையவரல்ல என்று! ஆனால் உண்மையில் கடவுள் கருணையுடையவராயினும் மிகவும் கண்டிப்புள்ளவருமாயிருக்கிறார்.
அந்த வாலிபனுடன் தொடர்பு ஏற்பட்ட பின் சினிமாக்களுக்கும் நடனங்களுக்கும் உல்லாச யாத்திரைகளுக்கும் சென்றோம். அவன் முன்பு நேசித்த பெண்ணை அவன் மறக்கும் அளவுக்கு அவளைப்பற்றி நான் அவனிடம் கோள் சொன்னேன். இறுதியில் அவன் எனக்கே சொந்தமாகி விட்டான். அதிலிருந்து அவனே எனக்கு கடவுளானான். அவனையே நான் ஆராதித்தேன் என்றே சொல்ல வேண்டும் அதுவே எனக்கு மத வழிபாடாயிற்று.
“அந்த வாலிபனுடன் எனக்குத் திருமணம் நடந்தது. கோவில் திருமணந்தான். ஆனால் நாங்கள் இருவருமே வேத அநுசாரங்களை நம்பவில்லை. முறையைக் கழிப்பதற்காக பாவ சங்கீர்த்தனம் செய்தேன். நன்மையும் வாங்கினேன். நீங்கள் இதை தேவ துரோகம் என்கிறீர்கள். அதென்ன தேவ துரோகம்? என் மனம் இதற்குப்பின் அமைதிப்பட்டு விட்டது. அதற்கு மேல் கோவில் பக்கமே போனதில்லை.
“என் கணவனும் நானும் எல்லாவற்றிலும் ஒரே கருது கொண்டிருந்தோம். குழந்தை வேண்டாமென்று முடிவு செய்தோம். எங்களுக்கு போதிய வசதி இருந்தது. ஆகவே அழகான வீடு, சௌகரியமான வாழ்க்கை , விருந்துகள், கலைநிகழ்ச்சிகள் இன்பமான பொழுதுபோக்குகள் – என் திடீர் மரணம் யிலும் ஒரே உலக இன்பமய வாழ்வுதான். ஆயினும், .என் இருதய ஆழத்தில் என்னை ஒரு புழு அரித்துத் தின்றது. வெளியே உரத்துச் சிரித்தேன். உள்ளே நிம்மதி இல்லை. அனுபவிப்போம்; செத்த அன்று முடிந்து போகட்டும் என்று நினைப்பேன். அந்த சாவு இப்போது வரக்கூடாது என்றும் விரும்புவேன்.
ஆனால் எனக்குத் திடீர் மரணம் வந்தது ஒரு வாரத்திற்கு முன், கடந்த ஞாயிறன்று என் கணவனும் நானும் உல்லாச யாத்திரைக்குப் புறப்பட்டோம். அன்று நான் குதுகலத்துடன் விழித்தேன். பயணம் திரும்பி வரும்போது காரை ஓட்டிவந்த என் கணவன் எதிரே வந்த வாகனம் ஒன்றால், பார்வை மறைக்கப்பட்டு விபத்து நேர்ந்தது. ‘கிரீச்’ என்ற சத்தம் – நான் நொறுங்கி நசுங்கிச் செத்தேன்.
“என் ஆவி பிரிந்த நொடியிலேயே என் வாழ்வு முழுவதையும் தெளிவாகக் கண்டேன். ஆ. என் பாவங்கள் அனைத் தும் அங்கு நின்றன! காலையில் நான் கொடுத்த மறுப்புவரை அனைத்தும்! தான் கொலை செய்தவனுடைய பிணத்தின் முன் நிற்பதுபோல் இருந்தது. வருத்தமா? இல்லை. வெட்கமா? இல்லை. நான் புறக்கணித்த கடவுள் முன்னிலையிலிருந்து ஓடினேன். – கண்காணா நீதிபரர் கூறினார், “என்னை விட்டு அகன்று போ’ என்று. நான்
எரியும் கெந்தகப் புகைபோல் முடிவில்லா நெருப்புக்குள் விழுந்தேன்.
கிளாரா, ஒருநாள் நரகத்தைப்பற்றி நீ சொன்ன போது நான் தீக்குச்சியைப் பற்ற வைத்து உன் நாசிக்கடியில் காட்டி அது இப்படி இருக்குமா? என்று கேட்டேன், சிரித்தேன். இப்பொழுது தெரிகிறது. தீ என்றால் தீதான் உருவகமல்ல உண்மையான நெருப்பு! எங்கள் மிகப்பெரிய வேதனை கடவுளை இழந்துவிட்டதுதான். இதை உலகில் நீங்கள் உணர்வதில்லை. கூரிய கத்தியைக் கண்டால் வேதனை இல்லை ஆனால் அது சதையில் குத்தப்பட்ட வுடன் எப்படி அதை உணர முடிகிறது! அதுபோலவே இதுவும். நான் போகிறேன் கிளாரா!” என்று கூறியபடியே அன்னாள் மறைந்தாள். கிளாராவின் கையில் இந்த கடிதம் புகையாகி அதுவும் மறைந்தது.
கிளாரா கனவினின்று விழிக்கவும் திரிகால மணி அடித்தது. அன்றுபோல் திரிகால ஜெபத்தை அவ்வளவு பக்தியுடன் அவள் சொன்னதேயில்லை.
ஆமென்

Comments are closed.