மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு உத்தரவு
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மறு அறிவித்தல் வரையில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்தல் விடுத்துள்ளது.
மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பு ஆரோக்கிய வழிமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விடுத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
Comments are closed.