கொழும்பில் புதிய 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !
இந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தைப் பகுதியில் உள்ளவர்கள் ஆவர்.
192 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 122 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்
இதேவேளை, இலங்கையில், 96 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.