இன்று கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  6 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 178 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 134 பேர் தற்போதும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

38 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.