யாழில் மற்றுமொருவருக்கு கொரோனா- இரண்டாவது நபர்
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த மூன்று கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த மூன்று கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி தனிமைப் படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட ஒருவருக்கே கொரோனா தொற்று என இனம் காணப்பட்டுள்ளார்.
பலாலிப் பகுதியில் குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 20 நபர்களில் மேலும் 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவருக்கு கொரோனா COVID – 19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இன்னும் சில மணித்தியாலங்களில் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
Comments are closed.