கொரோனா நோயாளிகளுக்காக திருத்தந்தை செபம்
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர் என்ற இயேசுவின் மலைப்பொழிவு போதகம் பற்றி, வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலகத்திலிருந்து மார்ச் 11, இப்புதன்கிழமை காலையில், மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியால் கடுமையாய்த் துன்புறும் நோயாளிகள், அவர்களுக்குத் துணிச்சலுடன் சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் தன்னார்வலர்கள், அவர்களுக்காகச் செபிக்கும் கிறிஸ்தவர்கள், நன்மனம் கொண்ட எல்லா மதத்தவர் போன்ற எல்லாருக்காகவும் நன்றி கூறி, ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை. பல ஆண்டுகளாக இடம்பெறும் போரால் துன்புறும் சிரியா மக்களை, குறிப்பாக, கிரீஸ் மற்றும், துருக்கி நாடுகளின் எல்லையில் சிக்கியுள்ள மக்களையும், இந்நேரத்தில் நினைக்கின்றேன். இவர்கள் போர், பசி மற்றும், நோய்களால் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். கோவிட் 19 தொற்றுக்கிருமி நெருக்கடியில், துன்புறும் இந்த சிரியா மக்களை மறந்துவிட வேண்டாமென்று, கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார், திருத்தந்தை. இறுதியில், நோயாளிகள், வயது முதிர்ந்தோர், இளைஞர், புதுமணத் தம்பதியர் போன்ற எல்லாரையும் வாழ்த்தினார். இந்த தவக்காலத்தில் நமக்காகத் துன்புற்று மரித்து உயிர்த்த இயேசு மீது நம் கண்களைப் பதிப்போம். அவரின் தூய ஆவியில் ஆறுதலையும், கனிவையும் பெறுவோம் என்று சொல்லி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால் ஏறத்தாழ ஒரு மாதமாக வீடுகளிலே இருக்கவேண்டிய சூழலில் உள்ள இத்தாலியர்களை, எல்லா சூழல்களையும், மிகவும் இன்னலான சூழலையும்கூட, மனஉறுதி, பொறுப்புணர்வு மற்றும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார். பதுவை நகர் “Due Palazzi” பங்குச் சிறைக் கைதிகளுக்கும் திருத்தந்தை நன்றி கூறினார்.
Comments are closed.