ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஒன்று கச்சதீவு புனித அந்தோனியார் குவிந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி இன்று சிறப்புற நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் , இந்தியா சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை லூர்துராஜா, தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் மற்றும் இலங்கை இந்திய குருக்கள் இணைத்து கூட்டுத்ததிருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் பாலசுப்ரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் எவ்.சி.சத்தியசோதி யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், முப்படைகளின் தளபதி றியல் அட்மிரல் ரவி விஜயகுணரத்ன, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் றுவன் வணிகசூரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் 7,000 பக்தர்கள் பங்கேற்புடன் வெகு சிறப்பாக கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா திருப்பலி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.