மல்வம் பங்கு இளையோருக்கும் புனித சவேரியார் குருமட நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்குமான ஒன்றுகூடல்

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மல்வம் பங்கு இளையோருக்கும் புனித சவேரியார் குருமட நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்குமான ஒன்றுகூடல் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மல்வம் பங்குத்தந்தை அருட்திரு லீயோ ஆம்ஸ்ரோங் அடிகளார் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
இந்நிகழ்வில் 15 அருட்சகோதரர்களும் 60 ற்கும் அதிகமான இளையோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சி, விளையாட்டு, கருத்துரை என்பன நடைபெற்றன. வளவாளர்களாக திருமறைக்கலாமன்றத்தை சேர்ந்த திரு. கரன்சன் ஜெகன் கலந்து இளையோரை வழிப்படுத்தி இந்நிகழ்வினை சிறப்பித்தார்.

Comments are closed.