வத்திக்கான், சீனாவுக்கு 6 இலட்சம் மூச்சு பாதுகாப்பு கவசங்கள்

காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“சகோதரர், சகோதரிகளே, கடவுளைவிட்டு தொலைவில் இருக்கையில், என் மகனே, என் மகளே, என்ன செய்கிறாய்? உன்னையே கொலை செய்யாதே, நான் உனக்காக இறந்துள்ளேன் என்ற கடவுளின் குரலை நம் இதயங்களில் கேட்பது நமக்கு நன்மைபயக்கும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

கொரோனா தொற்று கிருமி

கொரோனா தொற்றுக் கிருமி மேலும் பரவாமல் இருப்பதை தடை செய்வதற்கென, வாய்களைப் பாதுகாக்கும் ஆறு இலட்சம் முதல், ஏழு இலட்சம் மூச்சு பாதுகாப்பு கவசங்களை, வத்திக்கான், சீனாவுக்கு அனுப்பியுள்ளது என்று, பிப்ரவரி 3, இத்திங்களன்று அறிவிக்கப்பட்டது.

வத்திக்கானின் பரிந்துரையின்படி, வத்திக்கான் மருந்தகமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பான, கர்தினால் Konrad Krajewski அவர்களும், இத்தாலியிலுள்ள சீனத் திருஅவையின் மறைப்பணி மையமும் இணைந்து இந்தக் கவசங்களை அனுப்பியுள்ளன.

சீனாவில் இத்தொற்றுக்கிருமி தோன்றிய Hubei, இன்னும், Zhejiang, Fujian ஆகிய மாநிலங்களுக்கு, விமானம் வழியாக இந்தப் பாதுகாப்பு கவசங்கள், அனுப்பப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் உர்பானியானம் கல்லூரியின் உதவி இயக்குனர் அருள்பணி Vincenzo Han Duo அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை,  கொரோனா தொற்று கிருமிகளால் ஏறத்தாழ 17,480 பேர் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும், 362 பேர் இறந்துள்ளனர்

Comments are closed.