யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் – 2020 “துயருறுவோர் ஆண்டு”

சில்லாலை பங்கில் அமைந்துள்ள புனித ஜோசப் வாஸ் திருத்தலத்தில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவின் நிறைவில் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்களினால் யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் ‘துயருறுவோர் ஆண்டு’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அடையாளமாக இவ்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்து கொடி ஆயர் அவர்களினால் ஏற்றிவைக்கப்பட்டது. திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் புனித ஜோசவ் வாஸ் இலங்கையில் ஆற்றிய பணியை துயருறுவோருக்கு ஆற்றிய பணியாக சுட்டிக் கட்டி, புனிதரின் பணிக்காலத்தில் வாழ்ந்தோரை, விசுவாசத்தை காப்பதற்காக துயருற்றோர், உடல் நோயினால் துயருற்றோர். இயற்கையின் சீற்றத்தால் துயருற்றோர் எனவகைப்படுத்தி அவர்களுக்கு புனிதர் ஆற்றிய பணிகளை கோடிட்டுக்காட்டி, இவ்வாண்டில் யாழ். திருஅவை ஆயர், குருக்கள், துறவியர், பெதுநிலையினரென இணைந்து பல நிலைகளிலும் துயருறுவோருக்கு ஆற்ற வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டினார்.

Comments are closed.