குடும்பங்களில் இயேசு பிறப்பு குடில் பாரம்பரியம் ஊக்குவிக்கப்பட

நம் சகோதர சகோதரிகளிடம் நாம் இரக்கமுடன் செயல்பட வேண்டும் என இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘நாம் கடவுளுடன் கொண்டிருக்கும் நெருக்கம், நம் சகோதர சகோதரிகளை அன்புடன் அணுகி, அவர்கள் அனைவருக்கும் இரக்கம் காட்ட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறது’, என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், இத்திங்களன்று, திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C-9 எனப்படும் கர்தினால்கள் அவையின் ஆலோசனைக் கூட்டம் திருத்தந்தையின் முன்னிலையில் வத்திக்கானில் துவங்கியது.

மேலும், இதே நாளில், 7 திருத்தந்தையர்களின் கீழ் வத்திக்கானில் பணியாற்றியுள்ள அருள்சகோதரி Maria do Ceu Pereira அவர்களின் 90வது பிறந்த நாளையொட்டி, அவரை, சாந்தா மார்த்தா இல்லத்தில், காலை திருப்பலிக்குப்பின் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று, நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

வெளிநாட்டவரின் உதவியுடனும், பலரின் மௌனத்துடனும் காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் அமைதிக்காக இன்று செபிப்போம், என தன் முதல் டுவிட்டரில் கூறியுள்ளார் திருத்தந்தை.

இரண்டாவது டுவிட்டரில், ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில், விழிப்பாயிருத்தலை வலியுறுத்தி, ஏழைகளின் தேவைகள் குறித்து நாம் அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனவும், மூன்றாவது டுவிட்டரில், திருவருகைக் காலத்தின் அர்த்தத்தை எடுத்துரைத்து, நம்மிடையே இயேசுவின் இருப்பு நமக்கு ஆறுதலை வழங்கும் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.