எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள் டிசம்பர் 01

உலகில் எய்ட்ஸ் நோய்க் கண்டுபிடிக்கப்பட்டது முதல் அதை ஒழிப்பதற்கு குழுமங்கள் தொடர்ந்து முயற்சித்துவரும்வேளை, இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு குழுமங்களே சிறந்த நம்பிக்கைகளாக உள்ளன என்று, ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டிசம்பர் 01 இஞ்ஞாயிறன்று, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா. எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு இயக்குனர் Winnie Byanyima அவர்கள், குழுமங்கள் இன்றி, உலகில் இன்று, 2 கோடியே 40 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாது என்று கூறினார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பயன்படுத்துவோர் போன்றோர், குடிமக்களாக, தாங்களும் நலமாக வாழ சம உரிமை கொண்டுள்ளனர் என, உரிமை கோரத் தொடங்கியுள்ளனர் எனவும் Byanyima அவர்கள் கூறியுள்ளார்.  எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கு அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பாராட்டி ஊக்குவித்துள்ளார், ஐ.நா. அதிகாரி Byanyima.

“எய்ட்ஸ் நோய் ஒழிப்பில் குழுமங்கள் உதவுகின்றன” என்ற தலைப்பில், என்ற தலைப்பில், இவ்வாண்டு, எய்ட்ஸ் நோய் உலக விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று உலகளவில் ஏறத்தாழ 3 கோடியே 80 இலட்சம் பேர், எச்.ஐ.வி நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.