இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
வாழ்க்கையில் விரக்தியின் விளிம்பில் நிற்கும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கை நிலையை இறைவன் இரக்கம் கொண்டு மாற்றிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
‘அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
நமக்கு பிற மனிதர்களினால் வரும் இக்கட்டுகளிலிருந்து இறைவன் நம்மைக் காத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த நாள் முழுவதும் நமக்கு தூய ஆவியானவரின் வழிநடத்துதல் கிடைக்கப் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்றைய புனிதரும், 43வது திருத்தந்தையுமான முதலாம் செலஸ்டீன்
கத்தோலிக்க கிறித்துவக் கொள்கைகளைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டினார்.
நாம் கத்தோலிக்கக் கிறித்துவக் கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடிக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கொரோனா நோய்த் தொற்று பரவுதல் முற்றிலும் கட்டுக்குள் வரவேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை இதற்காக ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.