இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் பிறக்கும் முன்னரே நம்மைத் தெரிந்து கொண்ட நம் தந்தை நம் தேவைகளையும் அறிவார் என்பதை உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
“எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.” என இறைவேண்டல் செய்ய வேண்டும் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
நமக்கு எதிராக பிறர் செய்த பாவங்களை மன்னிக்கும் சிறந்த மனப்பக்குவத்தை இறைவன் நமக்குத் தந்தருள வேண்டி இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
விவசாயிகளின் பாதுகாவலரான இன்றைய புனிதர் போட்வுல்ஃப்பை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்குதடையின்றி பொது மக்களுக்குக் கிடைத்திட இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
கொரோனா தொற்று நோயின் மூன்றாவது அலைக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.