அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபட வேண்டும்

0

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும், நீதி, சமத்துவம் மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொள்கைகள், அதன் ஈடுசெய்ய முடியாத அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகள் இன்னும் அதிகமாக வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

அக்டோபர் 14, செவ்வாயன்று உரோம் காலை 11 மணியளவில் இத்தாலிய அரசுத்தலைவர் சேற்ஜோ மத்தரெல்லா அவர்களை குயிரினாலெ எனப்படும் அரசு மாளிகையில் சந்தித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இத்தாலிய நிலத்தைச் சுற்றி அமைந்துள்ள எண்ணற்ற ஆலயங்கள் மற்றும் மணி கோபுரங்களில் – பெரும்பாலும் கலை மற்றும் பக்தியின் உண்மையான புதையல்கள் மற்றும் அதன் அடையாளங்களை நாம் காண்கிறோம் என்றும், இதில் மக்களின் உள்ளார்ந்த படைப்பாற்றலானது, உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து, சிறந்த அழகின் சான்றை கலை வழியாக மட்டுமல்ன்றி ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானம் வழியாகவும் நமக்கு வழங்கியுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

இத்தாலிய நாடு தனது கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு வழங்கும் தாராளமான உதவிக்கும், மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், இவை நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாந இதிலிருந்து இத்தாலி ஒருபோதும் பின்வாங்கவில்லை என்றும் கூறினார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் ஒற்றுமை மனப்பான்மையை உயிருடன் வைத்திருக்க இத்தாலிய மக்களை  ஊக்குவிப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், இத்தாலிய சமூகத்தின் மதிப்புகள் மற்றும் மரபுகளில் புதியவர்களை ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.