மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலி திருப்பலியில் திருத்தந்தை

ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலி திருப்பலியினை நிறைவேற்ற இருக்கின்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு திருப்பலியினை வருகின்ற அக்டோபர் 12, ஞாயிறன்று உரோம் உள்ளூர் நேரம் காலை 10. 30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 11, சனிக்கிழமை மற்றும் 12 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் உலகெங்கிலும் வாழும் மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலியானது கொண்டாடப்படுகின்றது.

அக்டோபர் 11, சனிக்கிழமை காலை 9 மணியளவில் தூய பாத்திமா அன்னை திருத்தல அதிபர் தந்தை அருள்பணி. Carlos Cabecinhas அவர்கள் தலைமையில் திருப்பலி, நண்பகல் 12 மணியளவில் செபமாலை செபிக்க இருக்கின்றனர் மரியன்னை ஆன்மிகத்தார்.

மாலை 6 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் முன்தயாரிப்பு செப வழிபாடானது திருத்தந்தை அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது. இரவு 9 மணியளவில் அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுதிரி ஏந்திய செபமாலை பவனியானது வத்திக்கான் வளாகத்தில் நடைபெறும்.

Comments are closed.